பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கண்டன ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.
பேராசிரியர் பணி மேம்பாடு தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்க வேண்டும்.
பணி மேம்பாடு பெறுவதற்கு புத்தொளி / புத்தாக்க பயிற்சி கால நீட்டிப்பு 31.12.2023 வரைக்கான உரிய ஆணை விரைவில் வெளியிட வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்களுக்கு M.Phil. Ph.D. பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு விரைவில் வழங்க வேண்டும்.

முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பின்படி இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும்.
TRB 2007, 2008, 2009 பேராசிரியர்கள் இழந்த 6-7, 7-8 க்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேரடியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும்.
2000 ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 7 முறை நடந்த பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த பணி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும்.
தமிழக அரசு கல்லூரிகளில் பணிபுரியும் மூத்த பேராசிரியர் ஒருவரை பணிமூப்பு அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும்.
காலியாக உள்ள கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் திருச்சி கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் முனைவர் கோபாலகிருஷ்ணன் முனைவர் மதுரம் பொதுச் செயலாளர் முனைவர் சுரேஷ் இணைச் செயலாளர்கள் முனைவர் மஞ்சுநாதன் முனைவர் துர்கா தேவி பொருளாளர் முனைவர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் அரசு கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.