தொட்டியத்தில் புதிய தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு
தொட்டியத்தில் புதிய தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர் ஊராட்சியில் அரசலூர் முதல் கருப்புசாமி கோயில் வரையிலும் ,தோளூர்பட்டி ஊராட்சியில் முதலைப்பட்டி முதல் எலந்தமடை புதூர் வரையிலான தார் சாலையும், முருங்கை ஊராட்சியில் முருங்கை பழனி கவுண்டனூர்முதல் செல்வநாயகபுரம் வரையிலும், கிடாரம் ஊராட்சியில் கிடாரத்திலிருந்து தேவர் மலை வரையிலுமான தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.


விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார், கிருஷ்ணகுமார், பொறியாளர் கலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளில் ஊராட்சி செயலர்கள் அனைவரையும் வரவேற்றனர்.
பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். விழாவில்முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணியம்மை கதிர்வேல், திமுக நிர்வாகிகள் முருகன், பிரகாஷ் மலர்மன்னன், ஞானவேல் பழனிவேல் ஸ்ரீதர் கோகிலா கண்ணதாசன்
திருப்பதி கார்த்திகைப்பட்டி பிரபு மணமேடு சண்முகம் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பத்மநாதன் மற்றும் திமுக திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கே குமார் செய்தியாளர் முசிறி





Comments are closed.