முசிறியில் தேமுதிக மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

- Advertisement -

முசிறியில் தேமுதிக மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாத்தையங்கார்பேட்டை தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி நான்கு தொகுதி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 

ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக சார்பில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

 

* தேமுதிக கட்சியில் வீடு வீடாக சென்று தீவிர உறுப்பினர் சேர்ப்பது

 

* ஆகஸ்ட் 25 மறைந்த தேமுதிக தலைவர் பத்மபூஷன் கேப்டன் பிறந்தநாள் விழா கொண்டாடுவது

 

* கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரத யாத்திரை வருகை குறித்தும்

 

* செப்டம்பர் 14 கட்சி துவக்க விழா கொண்டாடுவது என ஐந்து திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன

 

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ். குமார் பேசுகையில் தேமுதிக பொதுச் செயலாளர் ஜான்சி ராணி பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரத யாத்திரை வருகை தர இருப்பதால் அனைவரையும் பொதுமக்களை அழைத்து வர வேண்டும்,

மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொது செயலாளர் வருகை குறித்து எடுத்துக் கூறி அனைவரையும் அழைத்து வர வேண்டும்,

 

 

மற்றும் மறைந்த தேமுதிக தலைவர் பத்மபூஷன் கேப்டன் பிறந்தநாள் விழா அனைத்து கிளைகளிலும் கொண்டாட வேண்டும் என்று பேசினார்,

 

நிகழ்வில் மாவட்ட தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுமுகம்,

மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சக்தி சண்முகவேல், மன்னச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் பார்த்திபன்,

முசிறி தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

ஆலோசனை கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

 

நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள்

 

தாத்தையங்கார் பேட்டை

- Advertisement -

சிவமணி பாக்கியராஜ்

 

துறையூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை

 

மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்

 

முசிறி கிழக்கு ஜெயராமன்

 

தொட்டியம் மேற்கு விஜயசேகரன்

 

தொட்டியம்

கிழக்கு ரவிக்குமார்

 

புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் இளையராஜா

 

உப்பிலியபுரம் கருணாகரன்

 

முசிறி நகர கழக செயலாளர் நகர மன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன்

 

பேரூர் செயலாளர்கள் தாப்பேட்டை தர்மராஜ்

 

மேட்டுப்பாளையம் ராஜா

 

தொட்டியம் அர்ஜுனன்

 

சமயபுரம் ராஜா

 

மணச்சநல்லூர் ஜனனி ஆறுமுகம்

 

துறையூர் நகர செயலாளர் சங்கர்

 

மற்றும் முசிறி துறையூர் மண்ணச்சநல்லூர் லால்குடி தொகுதி உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

முடிவில் முசிறி தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்

 

கே குமார் செய்தியாளர் முசிறி

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்