இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே கடலில் English Channel என்கிற கடல் வழி பயணத்தில் தமிழக வீரர் சாதனை

- Advertisement -

இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே கடலில் English Channel என்கிற கடல் வழி பயணத்தில் தமிழக வீரர் சாதனை

 

இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே கடலில் English Channel என்கிற கடல் வழி பயணத்தை 36 கி.மீ தூரத்தை 12 மணி நேரம் பத்து நிமிடங்கள் நீச்சலடித்து கடந்து ஆறு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து தேனியை சேர்ந்த அதவைத் (18), சென்னையை சேர்ந்த அகிலேஷ், அஸ்ஸாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று பேர் இந்தியா சார்பிலும், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இருவர், மெக்சிகோவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஆறு பேர் அதில் பங்கேற்றனர். சுமார் 36 கி.மீ தூரத்தை 12.10 மணி நேரத்தில் கடந்து ஆறு பேரும் சாதனை படைத்துள்ளனர். சாதனைக்குப் பின்பு அதவைத் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை அவரின் பெற்றோர்களும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

- Advertisement -

வரவேற்பிற்கு பின் அதவைத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..

 

நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன். மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். தற்போது கடினமான கடல் வழியை நாங்கள் கடந்துள்ளோம். மிகவும் கடினமான கடல் வழி பகுதிகளில் English Channel பகுதியும் ஒன்று. 16 டிகிரி குளிரில் இதனை நான் கடந்துள்ளேன். இதற்காக மூன்று மாதம் இங்கு பிராக்டிஸ் செய்துள்ளேன். அங்குள்ள கிளைமேட்டை ஏற்றுக் கொள்வதற்காக அங்கு ஒரு மாதம் பிராக்டிஸ் செய்தோம். 18ஆம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த போட்டி வானிலை காரணமாக 27ஆம் தேதி மாற்றப்பட்டது, அன்றும் வானிலை காரணமாக 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அன்று வெற்றிகரமாக இந்த சாதனையை முடித்துள்ளோம். இதற்கு முன்பும் இதே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சினேகன் என்ற இளைஞர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்