திருச்சி ஶ்ரீ ஶ்ரீ பான்பராக் சித்தரின் நண்பரான பகவான் ஶ்ரீலஶ்ரீ சாக்கடை சித்தரின் 8 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவிலில் நடைபெற்றது. இந்த மஹா குருபூஜையில் ஶ்ரீ ஶ்ரீ பான்பராக் சித்தர் கலந்து கொண்டு பூஜைகளை தொடங்கி வைத்தார். அதன்படி காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய பூஜையானது, 10 மணி அளவில் சஷ்டி திதியில் திருவோணம் நட்சத்திரம் கூடிய சித்த யோகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சித்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சித்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை நிர்வாகிகளான அழகேசன், சித்ரா, சந்திராபாய், பிரியா, செல்வி அரிஷ்மா, கீதா மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.