திருச்சியில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

- Advertisement -

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில்…

புத்தகம் படிப்பதன் மூலம் எதனையும் பகுத்தறிந்து பாா்க்கும் திறனை வளா்த்துக் கொள்ள முடியும். வீட்டுக்கு ஒரு பாட சாலை இருந்தால் அந்த நாடு சிறந்த நாடாக விளங்கும். புத்தகம் மாற்றம் உருவாகும். அதற்கான மாற்றத்தை இன்றே தொடங்குங்கள். எனவே, இந்த புத்தகத் திருவிழாவை மாணவ சமுதாயம் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். விழாவில், திருச்சியைச் சோ்ந்த மருத்துவா் அலீம், முனைவா்கள் இராஜகோபாலன், அந்தோனி குரூஸ், இராஜரத்தினம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கெளரவிக்கப்பட்டனா்.

இக் கண்காட்சியில் 160 அரங்குகளில் 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள், லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காண அனுமதி இலவசம். தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, உதவி ஆட்சியா் அமித் குப்தா, கோட்டாட்சியா்கள் தட்சிணாமூா்த்தி, அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா், புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் நிா்வாகி சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்