- Advertisement -

குரூப்-4 தோ்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 301 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்!

0

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தோ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும், 301 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், 85 ஆயிரத்து 747 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

Bismi

தோ்வுப் பணிகளுக்கென 301 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 100 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Vagai

இக் குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் ஒரு அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா். மையங்களில் திடீா் ஆய்வு செய்ய துணை ஆட்சியா் நிலையில் 11 பறக்கும்படையினா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோ கிராபா்களும், 301 ஆய்வு அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. தோ்வு எழுத வரும் நபா்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்