- Advertisement -

தொடங்கிய 3 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்கள், தனி நபர் அமைப்புகளுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை!

- Advertisement -

​தொடங்கிய 3 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்கள், தனி நபர் அமைப்புகளுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “We the Leaders” இயக்கம், ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிப் சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதோடு, இயக்கத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், தன் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் பிற அமைப்புகள் குறித்தும் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Vagai

​பதவிகள் எதுவும் தற்காலிகமே – முக்கிய அறிவிப்பு

​இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “இந்த இயக்கம் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான சிறு தொடக்கம் மட்டுமே. தற்போதைய சூழலில் நான் உட்பட அனைவருமே இந்த இயக்கத்தின் ஒரு அங்கமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், நமது இயக்கத்தில் யாருக்கும் ‘நிரந்தரப் பதவி’ என்பது கிடையாது. இந்த ஒரு மாத காலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் முழு கவனம் செலுத்தும்” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

​பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்த வேண்டாம்: அண்ணாமலை வேண்டுகோள்

Bismi

​இதற்கிடையில், சில தன்னார்வலர்கள் தன்னிச்சையாக இணைந்து, மாவட்ட வாரியான பொறுப்புகளை அறிவித்து சில இயக்கங்களைத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கும் “We the Leaders” இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது.

​”ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால் நீர்த்துப் போய்விடும். ஏற்கனவே அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற அமைப்புகளுக்கு எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து அவர்கள் இதில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.”

​எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என தனது பெயரைப் பயன்படுத்தும் அமைப்புகள், உடனடியாக தனது பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

​இணைய வழியில் இணைய அழைப்பு!

​இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளில் மட்டுமே அனைவரும் இணைய வேண்டும் என்றும், “We the Leaders” இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் wetheleader.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

​#WeTheLeaders #Annamalai #TamilNaduPolitics #PoliticalChange #Wetheleader #TNPolitics

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்