நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடி நிதி உதவி

0

நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடி நிதி உதவி

 

- Advertisement -

நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ள நிலையில்,
பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்