தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுதபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வாகனங்களுக்கு பூ, பழம், பொரி, சுண்டல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ரமணன், பொருளாளர் திலீப், கவுரவ தலைவர் சகாயராஜ் உள்பட நிர்வாகிகள், ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.