- Advertisement -

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு பாராட்டி- சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார்

0

- Advertisement -

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், திருச்சி கோட்டை போக்குவரத்து காவல் தலைமை காவலர் காமராஜ் என்பவர் சாலையை மண்வெட்டி எடுத்து உடனடியாக போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் சீர்படுத்தினார்.

Vagai
Bismi

தற்போது அந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது. காவல்துறையில் எப்பொழுதும் மெச்சத்தகுந்த பணிகள் செய்யக்கூடிய காவலர்கள், அதிகாரிகள் உண்டு என்பது சிறப்புக்குரியது. பாராட்டுக்குரியது.
தலைமை காவலர் காமராஜ் கடந்த 2005ஆம் ஆண்டு திருச்சி காவல் ஆணையர் பாதுகாவலராக பணியாற்றிய போது அவருடைய மிடுக்கான தோற்றங்கள், அவருடைய கனிவான சேவைகள் பொது மக்களிடத்தில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியதுது.

2005ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது காவல் ஆணையர் பாதித்த பகுதியை பார்வையிட்ட போது அவரோடு கூட வந்து அவரும் தண்ணீரில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

பல்வேறு நிலைகளை போக்குவரத்திலும் அவருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்யக்கூடிய ஒரு சிறந்த காவல் தலைமை காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 15 ஆண்டுகளாக இவர் குறித்து நான் பல செய்திகள் உள்ளது.

அவர் சிறப்புக்குரிய ஒரு தலைமை காவலர். இப்படிப்பட்ட காவலர்களை நமது காவல் துறை உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்