சாலையில் வசிப்போருக்கு
ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில்
உணவு ஆடை வழங்கப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் ஜே.கே.சி அறக்கட்டளையின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு சாலையோரம் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உணவு ,ஆடை, பிஸ்கட் உள்ளிட்டவை ஜே.கே.சி நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில்
ஏழைக்கு இறக்கம் காட்டுவோம், பசித்தோருக்கு உணவளிப்போம், இல்லாதவருக்கு இயன்றதை செய்வோம் என்ற திட்டத்தில் இந்த நற்பணியை ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். என்ன நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.