கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் உயிரிழப்பு -போலீஸர் தீவிர விசாரணை
கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஷகானா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது,
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ஷகானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.A
மேலும் இதுதொடர்பாக போலீசார் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனால் சந்தேகத்தின் பேரில் ஷகானாவின் கணவர் ஷாஜத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் பிரபல மாடல் அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.