ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் – பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர்

0

தமிழகத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கான வேண்டுதலை  பக்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.
இரண்டாண்டு காலமாக கொரோனா நோய்  தொற்று காரணமாக திருகோவில்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது தமிழகம் முழுவதும் நடைபெறும் திருவிழாவில் ஆர்வத்துடன் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

தஞ்சை சப்பர தேர் ஊர்வலம் வரும் பொழுது மின் கம்பிகள் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது.
எனவே திருச்சியில் வரும் 29.04.2022 ந் தேதி வெள்ளிக்கிழமை பூலோக வைகுண்டமாம்  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் சித்திரை தேர்திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு “உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளதால் தேர்திருவிழாவின் பொழுது பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Bismi

எனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்  நடைபெற கூடிய ஸ்ரீங்கம் சித்திரை தேர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பை வலுபடுத்தி முன்னேற்பாடுகளுடன் தேர்திருவிழா அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வெங்கடேசன் என்கிற சுதாகர்  வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் தஞ்சை சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்