உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி திருச்சி மா காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி திருச்சி மா காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி திருச்சி மா காவேரி மருத்துவமனை நடத்தும் விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகளவில் உலக பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் தாய்மார்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும், இவ்விதமான முக்கியமான நிகழ்வை முன்னிட்டு, குறைமாத மற்றும் எடை குறைவுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை மையமாக விளங்குகிறது திருச்சி மா காவேரி மருத்துவமனை.
உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி கிளப் மெட்ரோ, இன்னர் வீல் கிளப் மெட்ரோ திருச்சி, தேசிய பச்சிளம் குழந்தை மருத்துவ கழகம் (NNF) -திருச்சி, மற்றும் இந்திய குழந்தை மருத்துவக் கழகம் (IAP) – திருச்சி கிளை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தினார்கள்.
பேரணியை திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் சேஷாத்ரி மயும் தீபி சானு, ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தார். பேரணியை மா காவேரி மருத்துவமனை மூத்த பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தில் குமார் தலைமையேற்றார்.
இந்த ஆண்டின்மையக் தலைப்பு:
“பாலூட்டலை முன்னிலைப்படுத்துங்கள்- நிலைத்த ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்”
இந்த நிகழ்வில் மா காவேரி மருத்துவமனை நிர்வாகிகள், ரோட்டரி மற்றும் இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆரம்பித்து மா காவேரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். திருச்சி மா காவேரி மருத்துவமனை சமூக நலனை முன்னெடுத்துச் செல்ல இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
Comments are closed.