“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!
மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!
“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!
மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலி நவம்பர்.14:-
நீரிழிவு நோயிக்கான “இன்சுலின்” மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட் ( CHARLES BEST) என்பவருடன் இணைந்து,1922- ஆம் ஆண்டு கண்டுபிடித்த, கனடா நாட்டை சேர்ந்த பிரடெரிக் பாண்டிங் ( FREDERICK BANTING) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை ( UNO- UNITED NATIONS ORGANIZATION) மற்றும் அகில உலக நீரிழிவு கூட்டமைப்பு (IDF- INTERNATIONAL DIABETES FEDERATION) ஆகியவற்றின் வழிகாட்டு நெறிகளின்படி, உலக நீரிழிவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று { நவம்பர்.14} இந்த தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி “அரவிந்த் கண் மருத்துவமனை” சார்பாக, “விழிப்புணர்வு பேரணி” நடத்தப்பட்டது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து புறப்பட்ட இந்த பேரணியை, மாநகர காவல் மேற்கு மண்டல “துணை ஆணையர்” டாக்டர் V. பிரசன்ன குமார், பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்து, தாமும் பேரணியில் பங்கேற்றார்.
அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகரும், புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் R. ராம கிருஷ்ணன், இந்திய மருத்துவக்கழக சங்கம், திருநெல்வேலி பிரிவு தலைவர் டாக்டர். M.முகம்மது அபுபக்கர் ஆகியோர், முன்னிலை வகித்தனர். பேரணியில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அரவிந்த் மருத்துவமனை வளாகத்தில், நீரிழிவு நோய் குறித்த ஒருவாரகால, “விழிப்புணர்வு கண்காட்சி” ஒன்றை, அரவிந்த் மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் R. மீனாட்சி, விழித்திரை பிரிவு தலைவர் டாக்டர் A. செய்யது முகைதீன் ஆகியோர் முன்னிலையில், மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் “ரிப்பன்” வெட்டி, திறந்து வைத்தார்.
இதுபோல, நெல்லை வண்ணார் பேட்டை, தெற்கு புறவழிச்சாலையில், “டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை” சார்பாக நடைபெற்ற, “சர்வதேச நீரிழிவு தினம்” விழாவில், “மனிதச்சங்கிலி” நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை, “லயன்ஸ் சங்க ஆளுநர்” PMJF லயன் H.ஷாஜஹான், துவக்கி வைத்தார். மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் D. லயனல், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் கல்லூரி மாணவிகள், கவுசானல்புரம் இதயஜோதி நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் டாக்டர் அகர்வால் ஆப்டோ மெட்டிரி கல்லூரி மாணவிகள், தங்களுடைய கரங்களில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை ஏந்தியபடி, இந்த “மனிதச்சங்கிலி” நிகழ்ச்சியில், பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.