- Advertisement -

திருச்சியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி!

- Advertisement -

உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக திருச்சி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

Bismi

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்