- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையினர் அறிவிப்பு!

0

- Advertisement -

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் போயர் நல வாரியம் அமைக்க வேண்டும், கல் உடைக்கும் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி போயர் சமுதாய மக்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி வேலை வாய்ப்பு அரசு கட்டுமான பணிகளுக்கு போயர் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அதேபோல் அரசு வேலை சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினராக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.

Bismi

அதனைத் தொடர்ந்து உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

Vagai

தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட போயர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் இவை அனைத்தும் பின்தங்கிய நிலையிலேயே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் எங்களின் ஓட்டுக்கள் பெறவே அதிமுக திமுக இரு கட்சிகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் மட்டும் அறிவித்துவிட்டு ஆட்சி அமைத்தவுடன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசுவதில்லை. எனவே இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்