உறையூர் ஶ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது!

திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. எட்டாம் தேதி சிறப்பு பூஜையும், நேற்று மதியம் ஒரு மணி அளவில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

- Advertisement -

அன்னதானத்தினை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ், மாவட்டத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாலை 6 மணி அளவில் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவருமான ஜி.டி.தினகர், விழாக் குழு செயலாளர் பட்டாசு கண்ணன், முத்துராஜர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்