திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய அரங்கன் பள்ளி கொள்ளும் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஆன்மிக தலத்தில் மட்டும் இன்றி அரசியல் களத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது,

 

139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1, 50, 799 பெண் வாக்காளர்கள் 1, 61, 179 திருநங்கைகள் வாக்காளர்கள் 51 மொத்தம் 3,12,029 வாக்காளர்கள் உள்ளனர், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்காளர் எண்ணிக்கையை கொண்டது இத்தொகுதி,

அதில் முத்தரையர் சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர், அதனுடன் பிராமணர்கள், முதலியார், படையாட்சி, வன்னியர், பள்ளர், மற்றும் பிற சமூகத்தினரும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளனர்.

 

மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த டாக்டர் செல்வி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி வாகை சூடி முதல் அமைச்சராக பதவி ஏற்றார் . ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து மலைக்கோட்டை மாநகரில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல் -அமைச்சராக அனுப்பி வைத்தன் மூலம் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் விவசாயம் தான் தொகுதி மக்களின் பிரதான தொழில். உய்யகொண்டான், கட்டளை உள்ளிட்ட காவிரியின் கிளை வாய்க்கால்கள் இந்த தொகுதியின் பல கிராமங்கள் வழியாக செல்வதால் தண்ணீ்ர் பிரச்சினைக்கு வேலை இல்லை. இதன் காரணமாக நெல், வாழை, வெற்றிலை, கரும்பு பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட மலர் சாகுபடியும் விவசாயிகளின் முக்கிய தொழிலாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் பருவ மழை பொய்த்து விட்டால் வறட்சி தாண்டவமாடி விடும் நிலை தான் உள்ளது. மற்றபடி காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைைய விட்டால் வேறு தொழில்கள் இல்லை.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்…

1952- கம்யூ. வெற்றி

சிற்றம்பலம்(கம்யூ.) 25,343

சீனிவாசன்(காங்.) 17,364

1957- காங். வெற்றி

வாசுதேவன்(காங்.) 2,756

சிற்றம்பலம்(சுயே) 6,847

1962-காங். வெற்றி

சுப்பிரமணிய செட்டியார்(காங்.) 39,101

துரைசாமி(தி.மு.க.) 24,651

1967- காங். வெற்றி

எஸ்.ராமலிங்கம்(காங்.) 34,474

எம்.அருணா(தி.மு.க) 33,356

1971- ப.காங். வெற்றி

ஜோதி வெங்டாசலம்(ப.காங்.) 36,172

காமாட்சி(தி.மு.க) 33,239

1977-அ.தி.மு.க. வெற்றி

ஆர்.சவுந்தரராஜன்(அ.தி.மு.க.) 26,200

பேரூர் தர்மலிங்கம்(தி.மு.க.) 21,135

1980-அ.தி.மு.க. வெற்றி

ஆர்.சவுந்தரராஜன்(அ.தி.மு.க) 49,160

வி.சாமிநாதன்(காங்.) 42,761

1984- அ.தி.மு.க. வெற்றி

ஆர். சவுந்தரராஜன்(அ.தி.மு.க) 58,861

ஆர். பெருமாள்(காங்.) 34,909

1989- ஜனதா தளம் வெற்றி

வெங்கடேஸ்வர தீட்சிதர்(ஜனதா தளம் 42,629

கு.ப.கிருஷ்ணன்(அ.தி.மு.க.ஜெ.) 4,621

1991- அ.தி.மு.க. வெற்றி

கு.ப.கிருஷ்ணன்(அ.தி.மு.க.) 82,462

காட்டூர் ஜெயபாலன்(ஜனதா.) 30,918

Bismi

1996- தி.மு.க. வெற்றி

தி.ப.மாயவன்(தி.மு.க.) 73,371

மு.பரஞ்சோதி(அ.தி.மு.க.)43,512

2001- அ.தி.மு.க. வெற்றி

கே.கே.பாலசுப்பிரமணியன்(அ.தி.மு.க) 72,993

எம். சவுந்திரபாண்டியன்(பா.ஜ.க.) 60,317

2006-அ.தி.மு.க. வெற்றி

மு.பரஞ்சோதி(அ.தி.மு.க.) 89,135

ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்.) 78,213

2011-அ.தி.மு.க. வெற்றி

ஜெ.ஜெயலலிதா(அ.தி.மு.க.) 1,05,328

என்.ஆனந்த்(தி.மு.க.) 63,480

2015- இடைத்தேர்தல்-அ.தி.மு.க. வெற்றி

எஸ்.வளர்மதி(அ.தி.மு.க.) 1,51,561

என்.ஆனந்த்(தி.மு.க.) 5,045

2016 அ.தி.மு.க. வெற்றி

எஸ்.வளர்மதி (அ.தி.மு.க) 1,08,400

எம். பழனியாண்டி (தி.மு.க) 93,991

இதுபோன்று வெற்றி பெற்றுள்ள நிலையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கட்சியின் கூட்டணியில் அதிமுக வேட்பாளராக தற்போது திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் அமைச்சர் வளர்மதி, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய போது ஸ்ரீரங்கத்தில் அவருக்காக இறங்கி வேலை பார்த்த கொறடா மனோகர் மற்றும் ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் ஆகியோர் களம் இறங்க உள்ளனர், பெரும்பான்மையான ஆதரவாளர்கள் இந்த முறை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு தான் வெற்றி என்றும் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது…

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முக்கிய அரசியல்வாதி ஆவார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சட்டமன்ற உறுப்பினர் திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைந்த முதலமைச்சர் செல்வி
ஜெ ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார், அதன்பின்னர் அவர் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

முன்னாள் அமைச்சர் வளர்மதி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முக்கிய நிர்வாகி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து 2015 இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
2016-ல் மீண்டும் வெற்றி பெற்று
2016-2021 அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்,
ஆசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை படிப்பு படித்தவர், வழக்கறிஞர்.
தற்போது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், குறிப்பாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பங்கெடுத்து வருகிறார்.

 

கொறடா மனோகர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதி ஆவார். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்.
இவர் 2011 முதல் 2016 வரை தமிழக சட்டப்பேரவையின் அரசு தலைமை கொறடாவாக (Chief Government Whip) பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.

ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை புதிதாக ஒருவருக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்று கட்சிக்காரர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

அந்த வகையில் ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் முதன்மை இடத்தை பெற்றுள்ளார் இவர் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை முத்தரையர் வாக்குகள் அதிகமாக உள்ளது புதிதாக தேர்ந்தெடுத்தால் ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று அப்பகுதி அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது, கடந்த 2011-ல் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு மாற்று வேட்பாளராக அடுத்த வரிசையில் இருந்தார். அதேபோல் சென்ற முறையும் கு.ப.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக இவர் பெயர் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது .

கடந்த 27 ஆண்டுகாலமாக அதிமுக கட்சியில் தீவிர பணியாற்றி வருகிறார். கட்சி சார்பாக சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்து தொகுதி மக்களின் பலத்த அன்பை பெற்றவர். பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் என்று அந்த பகுதியையே கலக்கி வருகிறார். இவருக்கு இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்றே கட்சியினர் கூறுகிறார்கள்.

2026 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ (MLA) திமுகவின் எம். பழனியாண்டி ஆவார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

மக்கள் மத்தியில் பிரபலமான மூன்று நபர்களும் ஸ்ரீரங்கத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளனர் என்றும் அதற்கான வேலைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில்.

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிற்பதற்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த முறை அவர் வேட்பாளராக நின்றாலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு தான் வாக்குகள் செலுத்தப் போவதாக அவர் சார்ந்த சமுதாயத்தினரே வாக்குறுதி அளித்து வருகிறார்களாம்,

அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை, அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் ரகசிய சர்வே எடுத்து கட்சி மேல் இடத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்களாம்,

அதில் பெரும்பான்மையான கருத்து கட்சிக்காக தொடர்ந்து யார் உழைத்து வலு சேர்த்தார்களோ அவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே… அதனை கட்சியின் மேல் இடத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள் ரகசிய குழு

அதிமுக கட்சியின் ஆசை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேறுமா,
களத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குகள் விழுமா,
மக்கள் எதிர்பார்த்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்களா,

என்று பல்வேறு கேள்விகள் எழும் நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் அதிமுக தான் இந்த முறை வெற்றி பெறும் என்று தங்களது வேலையை ஆரம்பித்து விட்டார்களாம்.

 

 

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்