ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை எங்கே?
எங்க இருக்கு! எங்க இருக்கு!! எங்க இருக்கு!!! இந்தா இருக்கு!
எங்க இருக்கு! எங்க இருக்கு!! எங்க இருக்கு!!! இந்தா இருக்கு!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு திருச்சி புறநகர் பகுதியில் இருந்து வாகனத்தின் உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், புதிதாக லைசன்ஸ் எடுப்பவர்கள், லைசென்ஸ் ரெனிவல் செய்பவர்கள், புதிதாக பைக், கார் மற்றும் மோட்டார்கள் வாங்குபவர்கள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பெண்களுடன் குழந்தைகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் அனைவரும் வந்து செல்கின்றனர். வருபவர்கள் அவசர தேவைக்காக கழிப்பறை எங்க இருக்கு, எங்க இருக்கு, எங்க இருக்கு இந்தா இருக்கு என்று வடிவேலு படத்தில் காமெடியாக பேசுவது போல் தேடிச் செல்ல வேண்டி இருக்கிறது, அப்படிச் சென்று பார்த்தாலும் சுத்தமில்லாமல் உடைந்து, பாலடைந்த கட்டிடமாக இருக்கிறது.


ஆண்கள் கழிவறைக்கு கொஞ்சம் உள்ளே செல்வதற்கு வழி இருக்கிறது, ஆனால் பெண்கள் கழிவறைக்கு நுழையும் பகுதிக்கு சென்று எட்டி கூட பார்க்க முடியாது அந்த அளவுக்கு முள்புதார்கள் குவிந்து இருக்கின்றது. அப்போ உள்ளே எப்படி இருக்கும். இதனால் ஆர் டி ஓ அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் அனைவரும் முகம் சுளித்தவாறு, பொது வழியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


ஆனால் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டும் வேலை செய்யும் இடத்திலேயே கழிப்பறை வசதிகள் இருக்கிறது. அதுவும் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மட்டும்தான், பொதுமக்களுக்கு அனுமதி இல்லையாம்.

அரசு பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து கழிப்பறை கட்டிக் கொடுத்தாலும், அதனை முறையாக பராமரிக்காமல் பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்குகிறார்கள் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தின் அலுவலர்கள். இதனை முறையாக பராமரித்தால் அங்கு வருகை தரும் பொதுமக்களும் அருகில் உள்ள செக் போஸ்ட் பகுதி காவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து பலமுறை ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்கள் தெரிவித்தும், இந்த நாள் வரை கழிப்பறை சீமைக்கப்படவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் ஆய்வு செய்து, அதனை சீரமைத்து, உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.






Comments are closed.