காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள் நடந்தது என்ன ?
காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள் நடந்தது என்ன ?

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் ஆவர்.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் என்ற காவல் நிலையமானது, காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் கூட இந்த போலீஸ் நிலையத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு இந்த காவல் நிலையத்தில் இருந்து திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தியை அணைத்தனர். கூடுதல் போலீசாரும் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் முதலில் 8 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காவல் நிலைய வெடி விபத்தி பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Comments are closed.