ஜேகேசி அறக்கட்டளை சார்பில் சாலையோர மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஜேகேசி அறக்கட்டளை சார்பில் சாலையோர மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் ரயில்வே ஜங்ஷன் புதிய நுழைவாயில் அருகில் சாலை ஓரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஜேகேசி அறக்கட்டளை கௌரவ தலைவர் பேராசிரியர் ரவிசேகர் தலைமையிலும், நிறுவனத் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானவருக்கு சேலை, வேட்டி, சட்டை, கைலி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏர்போர்ட் எப்சிஏ திருச்சபை பேராயர் ஏ ஆபிரகாம் தாமஸ், இமானுவேல், தேவாலயம் பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜு, தமிழரசன், ஆசிரியர் அலெக்சாண்டர், வழக்கறிஞர் சி பி ரமேஷ், ஆடிட்டர் எம் ரிச்சர்ட், பிஆர்ஓ டி. விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதுபோல் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்னை தெரசா பிறந்தநாள், ஜேகேசி அறக்கட்டளை நிறுவனர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் மற்றும் 79வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெறுகிறது. இந்த விழாவிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed.