மூன்றாவது மொழி அல்ல, அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; ஆனால் எதையும் கட்டாயப்படுத்த கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

- Advertisement -

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளித்த பேட்டியில்..,

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்விக்கு அடித்தள மிட்டு நல்ல முடிவுகளை கொடுக்க துவங்கி விட்டோம். அந்த அடித்தளத்தின் மேல் என்னென்ன செய்ய உள்ளோம் என்பதை தொலைநோக்கு பார்வையுடன் கூறி விட்டோம். தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை அலசி ஆராய்ந்து மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மாணவர்கள் உயர்நிலையை அடைவார்கள்.

- Advertisement -

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்துள்ளோம். மாணவர்கள் கனவு மட்டும் கண்டால் போதும், அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எனக் கூறுவது தான் மாநில கல்விக் கொள்கை.

மாணவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம்.
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையைதான் பின்பற்றும் என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார். மூன்றாவது மொழி அல்ல, அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எதையும் கட்டாயப்படுத்த கூடாது.

மாநில கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். மாநில கல்விக் கொள்கையால் என்ன பயன் என்பதை ஆராய்ந்து விட்டு, அதன்பின் இது குறித்து பேசலாம்.

14 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தற்பொழுது தான் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசே கூறியுள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 3:12 சதவீதமாக இருந்தது, அதன் பின் அ.தி.மு.க ஆட்சியில் வெகுவாக குறைந்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த பொழுது பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டு டெண்டர் விடுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார். விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கிறார். தமிழ்நாடு வளர்ச்சிக்கு நான் தான் காரணம் என எந்த ஒரு பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கூட பார்க்க கூடாது என்றார்.

Translate in english

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்