திருச்சி அரபிந்தோ இண்டர்நேஷனல் பள்ளியில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!
வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக வாசவி கிளப் வனிதா திருச்சி மற்றும் வாசவி கிளப் எலைட் கபில்ஸ் திருச்சி மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய ஆரோக்கியம் 2024 என்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே உள்ள அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமிற்கு மாவட்ட கவர்னர் கோல்டன் கே.சி.ஜி.எஃப். ஆதிசேஷன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சர்வதேச தலைவர் டைமண்ட் கே.சி.ஜி.எஃப். ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, ஆயுர்வேதா, நேச்சுரோபதி, யோகா மற்றும் எலும்பு, பல், கண், தோல் ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் கேபினட் செயலாளர் பாலமுருகன், கேபினட் பொருளாளர் ரவிச்சந்திரன், மண்டல சேர்பெர்சன் திவ்யா வீரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், தலைவர் காயத்ரி, செயலாளர் ஹேமாவதி, பொருளாளர் மன்னர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.