- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

- Advertisement -

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் கீழ் வரும் துறைகளில் ஆட்களை புதிதாக வேலைக்கு எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று
ரோஜ்கார் மேளா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறுகிறது. இதில்
அரசு பணிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பணி ஆணை வழங்கினார்.

Bismi

இதன் ஒருபகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் மத்திய இணை அமைச்சர் ஜூவல் ஓரம் (Jual oram) கலந்து கொண்டு வங்கிகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணியிடங்களுக்கு, 97 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி உரையாற்றினார். முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக, ரோஜ்கார் மேளாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்