திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின் கீழ்,மின் நுகர்வோருக்கான புதிய அலுவலகத்தை, கல்லூரணி கிராமத்தில் திறந்து வைத்த, மேற்பார்வை பொறியாளர்!
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின் கீழ்,மின் நுகர்வோருக்கான புதிய அலுவலகத்தை, கல்லூரணி கிராமத்தில் திறந்து வைத்த, மேற்பார்வை பொறியாளர்!
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட, பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகமானது, நிர்வாகக் காரணங்களுக்காக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய அலுவலகத்தை “கல்லூரணி” கிராமத்தில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, இன்று [ஜூலை.31] காலையில்,ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து “குத்து விளக்கு” ஏற்றி வைத்த அவர், அதனை மின் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்காக, அர்ப்பணித்தார். புதிய அலுவலக திறப்பு விழாவில், செயற்பொறியாளர் (பொது ) வெங்கடேஷ், தென்காசி கோட்ட செயற்பொறியாளர் பொறுப்பு வகிக்கும் கற்பக விநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரான சங்கர், சுரண்டை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர்
ஸ்ரீவனஜா, உதவி மின் பொறியாளர்கள் முகம்மது உசேன், எடிசன், பிரேம்ஆனந்த், அனு, ஸ்ரீதர், சண்முகவேல், விக்னேஷ், ரகுநாதன், மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.