- Advertisement -

துறையூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு வாலிபர்கள் பலி

- Advertisement -

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (24) மற்றும் விக்கி (எ) விக்கினேஸ்வரன் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது துறையூரில் இருந்து ஆத்தூரை நோக்கி மோட்டார் சைக்கிளுக்கு முன்பு ஈச்சர் வேன் ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் வேனை சரண்ராஜ் முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஈச்சர் வேன் மீது எதிர்பாராதமாக மோதியதில் சரண்ராஜ், விக்னேஷ்வரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்தில் விக்னேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Bismi

சரண்ராஜ் பலத்த காயத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரன்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்த சரன்ராஜின் தாயார் இந்திரா துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈச்சர் டிரைவர் மற்றும் ஒரு நபர் என இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்