திருச்சியில் வணிகர் சங்க பேரமைப்பினர் டி-மார்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் – மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் சிறு குரு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திருச்சி வயலூர் சாலையில் வர உள்ள புதிய டி மார்ட் நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் திருச்சி வயலூர் சாலையில் டி மார்ட் புதிய கார்ப்பரேட் நிறுவனம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்கிரம ராஜா கூறும்போது…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாவட்ட நிர்வாகிகளை கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்னதாக தமிழக முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும். அதன் பின்னர் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வால்மார்ட் நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதேபோல வணிகர்களுக்கு வாரியம் அமைத்துக் கொடுத்து கலைஞர் கருணாநிதி மனிதர்கள் நலனை பாதுகாத்தார். ஆட்சி மன்றம் குழு வழிகாட்டுதலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
ஜி எஸ் டி மாற்றம் குறித்து கேள்விக்கு, பெங்களூருவில் அதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு மேல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். ஜிஎஸ்டியை இரண்டாக பிரிக்கின்றனர். சட்ட விதிகளை நிறுத்த வேண்டும். அவர்கள் எங்களை அழைத்துள்ளனர். அங்கு பேசி டிஜிட்டல் முறை என்ன என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்.
இந்தப் போராட்டத்திற்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். ஜிஎஸ்டி வரி விதிப்பதனால் பொருட்கள் விலை கட்டாயம் குறையும். ஆனால் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும். இதனை முறைப்படுத்தவில்லை என்றால் அரசு கஜானாவிற்கு செல்லக்கூடிய பணம் அவருடைய கஜானாவிற்கு போய்விடும். ஜிஎஸ்டி புதிய விதிமுறையை வரவேற்கிறோம் என்றார்.


Comments are closed.