திருச்சி உறையூர் M.M. லோட்டஸ் நகர் ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்!

0

- Advertisement -

திருச்சி உறையூர் ராமலிங்க நகர், MM லோட்டஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு, 22 ஆம் தேதி முதலாம் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 23 ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 24 ஆம் தேதியான இன்று காலை மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை செய்து, யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி காலை 9.45 மணி அளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் MM லோட்டஸ் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சந்தோஷ் குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன், திமுக உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ மற்றும் MM லோட்டஸ் குடும்ப உறுப்பினர்கள் உள்பட அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்