திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவி மர்ம மரணம் – கல்லூரி நிர்வாகம் கொலை செய்து விட்டதாக பெற்றோர் போராட்டம்!

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் தாரணி (வயது 19) என்ற இளம்பெண் விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக் கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால், இது குறித்து சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர். மேலும் இறந்த மாணவியை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜியை, நெடு நேரமாக அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் தாரணி இறந்துவிட்டார் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். இதற்கு உரிய விசாரணை வேண்டும் என தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்த மாட்டார்கள் என குற்றம் சாட்டி கல்லூரி வாயில் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்த தாரணி விடுதி அறையின் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையால் துப்பட்டாவை இழுத்து, கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விடுதி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெறித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கல்லூரி தனது மகள் இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்