திருச்சி SBIOA பள்ளி மாணவன் ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.

0

திருச்சி SBIOA பள்ளி மாணவன்
ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.

- Advertisement -

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த
மாஸ்டர்.ஆர்.கே.ஆல்டெரிக்
ஜெய பிரகாஷ் திருச்சி கே.கே.நகர் SBIOA சீனியர் செகண்டரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஜூன் 23 முதல் 25 வரை ஜப்பான் நாட்டின் கோச்சி நகரில் நடைபெறும் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட ஆசியக் கோப்பை ஆண்கள் சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு
விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலமாக சாப்ட்பால் விளையாட்டில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளார்.
முன்னதாக இவர் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்த்பூர், ஜல்கோன், மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் சாப்ட்பால் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்ட பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது சாப்ட்பால் வீரகாக இந்திய அணிக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சாப்ட்பால் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் அமைப்பின் கீழ், இந்திய தேசிய சாப்ட்பால் அணி, ஜூன் 21, 2023 அன்று புது தில்லியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் அணியில் இடம் பெற்றுள்ள மாஸ்டர் ஆல்டெரிக் ஜெய பிரகாஷ் அவர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட சாப்ட்பால் சங்கத் தலைவர் திரு. டி.ஜே. வெங்கடேஷ் துரை, SBIOA பள்ளிகளின் தாளாளர் திரு.கணபதி சுப்ரமணியம், பள்ளியின் முதல்வர் திருமதி.சகுந்தலா சுந்தரம் ஆகியோர் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்