திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மரத்தேர் வெள்ளோட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ₹.8 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேர் புறப்பாடினை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். தொடர்ந்து தேர் புறப்பாடானது உற்சவர் மண்டபத்தில் துவங்கி மாணிக்க விநாயகர் சன்னதியை வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த தேரினை உற்சவ காலங்களில் ₹.1000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் இழுக்கலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.