திருச்சி தனியார் கல்லூரி மாணவன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
திருச்சி தனியார் கல்லூரி மாணவன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
திருச்சி புத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபலமான தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமல்ல பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் சில மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் பயின்று வருபவர் அரியலூர் மாவட்டம் செங்கராயன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அபிஷேக். 2 ஆம் ஆண்டு B.com படித்து வருகிறார். இந்நிலையில் இவர் சரியாக கல்லூரிக்கு வருவதில்லை என விடுதி காப்பாளர், மாணவனின் தந்தையிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது மகன் அபிஷேகை தொலைபேசி மூலம் கண்டித்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மாணவர் அபிஷேக் நேற்று மாலை கல்லூரி விடுதியில் உள்ள கழிவறை ஜன்னலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் காவல்துறையினர் உடனடியாக உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments are closed.