திருச்சி கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது
தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன்
திருச்சி கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது
கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் திருச்சி செங்குலத்தான்- குழந்தாள்ம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு சாலையில் உள்ள புகழ்பெற்ற செங்குலத்தான் குழந்தாள்ம்மன் கோவிலில் 37ம் ஆண்டு சித்திரை திருவிழா மற்றும் 15ம் ஆண்டு பூச்சொரிதல் பெருவிழா
கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று காவிரி ஆற்றில் இருந்து சுவாமி புறப்பாடு மற்றும் சிறப்பு விசேஷ பூஜை நடைபெற்றது.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் 7வது குறுக்கு சாலையில் கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச புடவைகளை,
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழரசி சுப்பையா, டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷீலா தேவி, சுசீலா,ஜெனட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சுமார் 400க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.