சிறுமி விழுங்கிய நாணயம் – நவீன சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியத்தை சோ்ந்த 7 வயதுச் சிறுமி நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் நெஞ்சு வலியுடன் மூச்சு விடச் சிரமப்பட்ட அவரை, அவரது பெற்றோர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பப்பட்டாா். இதையடுத்து வயிறு மற்றும் குடல் சிகிச்சை துறைத் தலைவா் கண்ணன் தலைமையில் ராஜசேகா், சங்கா் உள்ளிட்ட மருத்துவா் குழுவினா் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் இருந்த நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அகற்றினா்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்