எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட செயலாளர் துவக்கி வைத்தார்
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிரி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் இலக்கிய அணி சார்பில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
பாலாஜி ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி கே.கே.நகர் உடையான்பட்டி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் முன்னாள் மாவட்ட செயலாளர் K.c. பரமசிவம், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஆர்.ஜோதிவாணன், மீனவர் அணி சார்பில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அம்பிகாபதி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.