திருச்சி காவிரி ஆற்று மணல் திட்டு பகுதியில் முதலை நடமாட்டம் – பாலத்தில் இருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் – போக்குவரத்து பாதிப்பு!

0

திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிர்ப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. திருச்சி சிந்தாமணி அருகே காவிரி ஆறு மற்றும் கரையோர பகுதியில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் உள்ளதாக நீண்ட காலமாக வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

மாலை நேரங்களில் முதலை மணல் திட்டுகளில் வந்து படுத்திருப்பதும் அதனை பொது மக்கள் கண்டு அச்சம் அடைந்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதும் தொடர் கதையாக சில நாட்களாக இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஓடை போல் ஓடுகிற சிறு தண்ணீரில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் சிலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்கக்கூடாது என்று ஏற்கனவே வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை காவிரி ஆற்று மணல் திட்டில் முதலை படுத்திருப்பதை பொதுமக்கள் ஒரு சிலர் பார்த்தனர். சிறிது நேரத்தில் காவிரி பாலத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு பார்க்க துவங்கினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து வாகனங்களை யாரும் இங்கே நிறுத்தக்கூடாது. பொதுமக்கள் இங்கே வேடிக்கை பார்க்க கூடாது என அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினர்.

தீயணைப்பு துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் வந்து முதலையை பிடிக்க முற்பட்ட பொழுது மீண்டும் தண்ணீருக்குள் ஓடிவிட்டது. மேலும் டிரோன் கேமிராக்கள் மூலம் முதலையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மீண்டும் முதலை தென்பட்டால் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்‌, முதலையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்