- Advertisement -

திருச்சி கேர் கல்விகுழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – இந்திய கபடி வீரர் பிரபஞ்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

0

- Advertisement -

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்வி குழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பா. பிரதிவ் சந்த், கல்லூரியின் அனைத்து டீன்கள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் தலைமை வகித்தனர்.

Vagai

விழாவில், இந்திய கபடி வீரரும், ஹரியானா ஸ்டீல் ரைடர்ஸ் அணியின் வீரருமான கே.பிரபஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா கொடியேற்றி போட்டிகளை தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பை கண்டு மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

Bismi

இதில் சிறப்பு விருந்தினர் பிரபஞ்சன் பேசுகையில்…

பெற்றோர்கள் மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற ஊக்குவிக்க வேண்டும். திறமையான மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கேர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சாந்தி நன்றியுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்