- Advertisement -

திருச்சி ஐ.ஐ.ஐ.டியில் இன்று 6 வது பட்டமளிப்பு விழா!

- Advertisement -

திருச்சி சேதுராப்பட்டியில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக்கழகத்தின் (ஐஐஐடி) 6-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செப்.14) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஐஐஐடியின் இயக்குநா் என்.வி.எஸ்.என்.சா்மா திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில்….

Bismi

திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக்கழக (ஐஐஐடி) வளாகத்தில் சனிக்கிழமையான இன்று 6 வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில், உத்தரகண்டில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழக (ரூா்க்கி) இயக்குநா் கமல்கிஷோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 70 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறாா். இந்நிறுவனத்தில் கல்வி பயின்றவா்கள் பலரும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் 46 லட்சம் வரையில் ஊதியம் பெறும் வகையில் அவா்களுக்கான வேலை வாய்ப்புகள் பெற்று தரப்பட்டுள்ளது என்றாா். இந்த பேட்டியின் போது, ஐஐஐடி பதிவாளா் ஜி. சீதாராமன், பேராசிரியா்கள் எம். அம்பிகா ஆகியோா் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்