இன்று 21-வது சுனாமி நினைவு தினம்!

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்!

Bismi

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங்கண்ணி, தூத்துக்குடி ஆகிய இடங்களை பயங்கரமாக தாக்கியது.குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பலியானவர்கள் நினைவாக அந்தந்த கிராமங்களில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நினைவுஸ்தூபிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 26-ந்தேதி இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதன்படி சுனாமி நினைவு தினமான இன்று(டிசம்பர் 26)சுனாமி பேரலைக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லறையில் பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். 21 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடு மாறாத அளவிற்கு உறவினர்கள் கதறி அழுதது காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.சுனாமி 21-வது நினைவு தினத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்