பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லா மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சு!

0

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் பேசுகையில்..

இந்தக் கூட்டம் மிக முக்கியமான கூட்டம். இன்றைய மாணவர்கள் நம்முடைய இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த கூட்டத்தின் வாயிலாக உங்களிடம் மூன்று கோரிக்கையை வைக்கிறேன்…

1,இந்த கூட்டம் நடந்ததற்கான வெற்றியாக நான் பார்ப்பது அடுத்த ஒரு மாத காலத்திற்கு எந்த ஒரு மாணவனும் எந்த ஒரு பள்ளியிலும் விடுமுறை எடுக்கவில்லை என்ற நிலையை உங்களிடமிருந்து உறுதி மொழியாக நான் இங்கு எதிர்பார்க்கிறேன். இடைநிற்றல் இல்லா பள்ளியாக உங்களுடைய பள்ளியை கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

2, எந்த ஒரு மாணவனும் என்னுடைய பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தை நான் இங்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
போதைப் பொருட்களின் புழக்கம் என்பது பள்ளியில் மட்டும் சார்ந்த விஷயம் கிடையாது, பக்கத்தில் இருக்க கூடிய கடைகளில் விற்கப்படுகிறதா என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
உங்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும்.

3, அனைத்து பள்ளிகளிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் மேம்பாட்டிற்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வரும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்கரநாராயணன், உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்