மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாவீரன் பொல்லானின் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வீரமடைகிறேன். எழுச்சி அடைகிறேன். மாவீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணி மண்டபம் அமைப்போம் என்று சொன்னேன் இன்று திறந்து வைத்துள்ளேன். சொன்னதை செய்கிறவன் நான் என்பதற்கு இந்த மாவீரன் பொல்லான் சிலையே சாட்சி. தீரன் சின்ன மலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான். அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தால் மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்லூரிகள் என அருந்ததியின மாணவர்கள் அதிக இடங்கள் பெற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். லட்சகணக்கான அருந்ததியின மக்களின் வாழ்க்கையில் திமுக அரசு ஒளியேற்றி இருக்கிறது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்.

டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் அத்தனை அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது. திமுக அரசு
ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்
தமிழகத்திற்கான திட்டங்களை நிராகரிக்கும் போது மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது.பாஜக ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது .வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கும் போது பட்டை, நாமம் போடுகிறது .பாஜக மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள்.வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் – ஈரோடு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Comments are closed.