மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய் கூறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம் – வீரபாண்டியன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியாவது :
அதில் 100 நாள் வேலை திட்ட பெயரை ஒன்றிய அரசு மாற்ற கூடாது, ஏழைகளின் வாழ்வாளிக்கும் அந்த திட்டத்தின் மீது தாக்குதல் நடந்த கூடாது.பல கோடி ஏழைகள் பயன் பெரும் அந்த திட்டத்தின் பெரும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதிலிருந்து விலகி மாநில அரசின் மீது சுமத்துகிறார்கள். ஏற்கனவே இருந்தது போல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.வேலை நாள் அதிகரித்திருப்பதை வரவேற்கிறோம் அதே நேரத்தில் முழுமையான நிதி ஒதுக்க வேண்டும்.கேரளாவில் இடதுசாரிகள் சிறு பின்னடைவை சந்தித்துள்ளார்கள். அந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்.திருவனந்தபுரத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது பேராபத்தின் அறிகுறியாக உள்ளது. மதவாத உணர்வுகளை தூண்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் வெற்றியடையலாம் அல்லது தோல்வி அடையலாம் .ஆனால் ஜனநாயகம் தோற்று விடக்கூடாது திருவனந்தபுரத்தில் மத உணர்வை தூண்டி பாஜக வெற்றி பெற்றதில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது.
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய் கூறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். அவரிடம் நாங்கள் கொள்கைகளை, திட்டங்களை எதிர்ப்பார்த்தோம்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் மிகுந்த ஜனநாயகத்துடன் நடந்து கொள்ளும் என நம்புகிறோம் .ஜனநாயக நெறிகளை அது நேர்மையானால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அதை நெருக்கடியாக அமையும் அதை நாங்கள் எச்சரிக்கிறோம். எத்தகைய சூழ்ச்சியிலும் ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் ஈடுபட கூடாது.

ஒன்றிய அரசு எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதிலும், மாநில உரிமைகளை பறிக்கவுமே காலத்தை கழிக்கிறது. திருப்பதியில் 36 ஆயிரம் கோடியில் ஆன்மீக நகரம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் நகரம் அமைப்பது நல்ல முறையல்ல மத ரீதியாக பிரிக்க ஒன்றிய அரசே பிரதமர் தலைமையில் செயல்படுகிறது. இது பேராபத்தாக அமையும்.
எத்தியோப்பாவிற்கு பிரதமர் சென்று வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை நாடுகளுக்கு இந்தியா உதவ வேண்டும்.வரும் 24 ஆம் தேதி மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க, கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.சிறிய கட்சியாக இருந்தாலும் பெரிய கட்சி என எந்த கட்சியாக இருந்தாலும் களத்தில் இருக்கும் கட்சிகள் தான். களத்தில் இல்லாத கட்சி என விஜய் கூறுவதை ஏற்க முடியாது.திமுக உடன் உறுதியான கூட்டணியில் இருக்கிறோம். மாசுபட்டவர்கள் விஜய் அருகில் வரும் போது தூய்மை அடைந்து விடுகிறார்களா ?திமுக ஜனநாயகத்திற்காக, மாநில உரிமைகளுக்காக குரல் எழுப்புகிறது. இந்தியாவின் கூட்டிசைவுக்காக குரல் எழுப்புகிறது அதனால் தான் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
பா.ஜ.க தீய சக்தியா ? தூய சக்தியா என்றால் அது ஆபத்தான சக்தி.
பொங்கலுக்கு மக்களுக்கு நிதிநிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு பணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசால் முடியவில்லை என்றால் ஒன்றிய அரசு தர வேண்டும்.
தேர்தலில் 30, 40 தொகுதிகளை கேட்க எங்கள் கட்சிக்கு தார்மீகள் உண்டு, எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்து கொள்ள மாட்டார். ஆனால் கூட்டணி சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம் வெற்றி பெறுவோம் என்றார்.


Comments are closed.