இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
- Advertisement -
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
இந்த மக்களவைத் தேர்தல் இந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். மக்கள் நல அரசியலா, மதவாத அரசியலா, ஜனநாயகமா அல்லது பாசிசமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். பிரச்சாரத்தில் எங்களுக்கு கொடுத்த வரவேற்பு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த திருச்சி தொகுதியில் மட்டுமல்ல புதுவை உட்பட 40தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளருக்கு வரவேற்பு சிறப்பான அளிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலின் அரசியல் சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்று நம்புகிறேன். ஜூன் 04 தேர்தல் முடிவு வரும் நாள் அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 101வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சருக்கு பரிசாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என 100% நம்புகிறோம். மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வாக்குப்பதிவு இருக்கிறதோ அது எங்களுக்கு சாதகமாக அமையும். கடந்த மூன்று வருடங்களாக நமது தமிழக முதல்வர் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடி நிலையிலும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
இந்த தேர்தலில் ஒன்றிய அரசு மாற்றம் வந்து ராகுல் காந்தி பிரதமர் பதவியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.