திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேய்ந்தான்குளம் அருகில் மாமன்னர் பூலித்தேவனுக்கு திருவுருவச்சிலை அமைக்க வேண்டும்-தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேய்ந்தான்குளம் அருகில் மாமன்னர் பூலித்தேவனுக்கு திருவுருவச்சிலை அமைக்க வேண்டும்-தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

இந்திய விடுதலை போரின் முன்னோடி, தமிழ் தேசிய பெரும்பாட்டின் நெற்கட்டான் செவல் பாளையத்தின் மாமன்னர் பூலித்தேவனின், 310 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு, பாளையங்கோட்டை மகாராஜநகரில்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அதன் மண்டலத் தலைவர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் “வழக்கறிஞர்” தௌ. அப்துல் ஜப்பார், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட செய்திதொடர்பாளர் ஜமால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் தங்கராஜ் பாண்டியன், வி.கே. புரம் நகரச் செயலாளர் மோகன் மள்ளர், தாழையூத்து நகரத் தலைவர் “தாதனூத்து” குமார் பாண்டியன்,நெல்லை டவுண் பகுதி பொருளாளர் பரம சிவன், மகா கேட்டரிங் முத்துகுமார், சி.துரைசாமி தேவர், குமரன், தாதனூத்து பவளமுத்து பாண்டியன்,கண்மணி சர்மிளா உள்பட, பலர் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர். அத்துடன், பொதுமக்களுக்கு “சர்க்கரை பொங்கல்” வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேய்ந்தான்குளம் அருகில் மாமன்னர் பூலித்தேவனுக்கு திருவுருவச்சிலை அமைக்க வேண்டும்.
2.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்திற்கு உடனடியாக “மன்னர் பூலித்தேவன் மாளிகை” என பெயர் சூட்ட வேண்டும்.
3)திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு “மாவீரன் சுந்தரலிங்கனார் வளாகம்” என முன்பு இருந்தது போலவே, மீண்டும் பெயர் சூட்ட வேண்டும்!. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





Comments are closed.