பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்
பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்
திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சியின் ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோனிகா ராணா, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள 4 மண்டலங்களில், தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் ஆகிய 2 மண்டலங்களில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக மேலப்பாளையம் மண்டலத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள உமறுப்புலவர் தெருவில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை பார்வையிட்டார். பணிகள் முடிவுற்ற இடங்களில், சாலைப்பணிகளை உடனடியாக துவக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.
முன்னதாக அவர், தச்சநல்லூர் மண்டலப்பகுதியில் உள்ள, நெல்லை சந்திப்பு த.மு. சாலை முதல், மதுரை தேசீய நெடுஞ்சாலை வரையில், கழிவு நீர் வாய்க்காலை பார்வையிட்டார். பருவமழைக் காலங்களில், கழீவுநீர் வாய்க்காலில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு,வாய்க்காலை தூர்வாரிடவும், நயினார் குளக்கரை பகுதியில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, விரைந்து முடித்திடவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மேலப்பாளையம் மண்டலத்தலைவி கதீஜா இக்லாம் பாசிலா, மாநகராட்சி கவுன்சிலர் எம்.ஏ. ரம்சான் அலி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், உதவி ஆணையாளர் ஜான்சன் தேவசகாயம், உதவி செயற்பிறியாளர் பேரின்பம் ஆகியோர், உடனிருந்தனர்.
Comments are closed.