திருமயம் ஸ்ரீ கலியபெருமாள் கோவில் முன்பாக ஐந்தடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலம், பக்தர்கள் சிறப்பு வழிபாடு
திருமயம் ஸ்ரீ கலியபெருமாள் கோவில் முன்பாக ஐந்தடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலம், பக்தர்கள் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஸ்ரீ கலியபெருமாள் கோவில் முன்பாக ஐந்தடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து இரண்டு நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, நேற்று மாலை 6 மணி அளவில் சிலை ஊர்வலமாக தொடங்கியது

பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார், மாவட்டத் துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர் எஸ் எஸ் அமைப்பாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், வீர முத்தரையர் சங்கர் மாநில செயலாளர் வக்கீல் மதி வாழ்த்துக்கள் தெரிவித்தார், ஊர்வலத்தை முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தொடங்கி வைத்தார். விநாயகர் ஊர்வலமானது கடைவீதி, பாப்பா வயல், அகில் கரை கோட்டை, ஊத்துக்கேணி தெருவழியாக உச்சிப்பாறை, மலையடி குளத்தில் இரவு ஏழு முப்பது மணி அளவில் விசர்ஜனம் செய்யப்பட்டது அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





Comments are closed.