ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. அது நிபந்தனையும் கிடையாது – திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. அது நிபந்தனையும் கிடையாது – திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் சார்பில்,
காமராசர் பிறந்த நாள் விழா, குமரிஅனந்தன் நினைவேந்தல், மற்றும் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில், இலக்கிய அணியின் தலைவர் புத்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காமராஜர், குமரிஆனந்தன், சிவாஜிகணேசன் ஆகியோரது உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கலை உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
அதிமுக பாஜக கூட்டணியை விரும்பாததால் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
எங்கள் கூட்டணிக்கு தான் வந்துள்ளார்.
அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூற முடியாது, அதை அதிமுக நிர்வாகிகளிடம் தான் தான் கேட்க வேண்டும். பிற மாநிலங்களில் பிஜேபி எல்லா கட்சிகளையும் உடைத்துள்ளது என்ற அவருடைய கருத்து சரியானதுதான்.
அகில இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.
பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் வித்தியாசமான சூழ்நிலையாக இதுவரை கூட்டணி ஆட்சி வந்ததில்லை.
காங்கிரசுக்கு ஆட்சியில் இடம் வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. நிபந்தனையும் கிடையாது. கூட்டணி கட்சியில் சிலர் முன் வைக்கின்றனர். இருப்பது 234 இடங்கள்தான். கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப ஒன்று, இரண்டு கூடலாம் குறையலாம்.
காங்கிரஸ் இத்தனை சீட்டுகள் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை.
திருமாவளவன் திமுகவிற்கு விழும் நான்கு ஓட்டில் ஒரு ஓட்டு தன்னுடைய ஓட்டு என்று தெரிவிக்கிறார் என்ற கேள்விக்கு?
ஒவ்வொரு கட்சியும் தாங்கள் பலமாக இருக்கிறேன் என்றுதான் கூறுவார்கள். நான் கூட சொல்லலாம் நாளில் மூன்று ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு விழும் என்று.
திருச்சி சிவா கூறிய கருத்திருக்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன், அறிக்கை தொடர்பாகவும் கண்டித்து உள்ளேன்.
சிவா இது குறித்து விளக்கம் கொடுத்துவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்துகையும் இது குறித்து கருத்து தெரிவித்து விட்டார். அந்த பிரச்சனை முடிந்து விட்டது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
Comments are closed.