திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்…
ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது. இந்திய நாடு மதசார்பு நாடாக உருவாக கூடாது. இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார். இன்று இந்திய நாடு ஆர் எஸ் எஸ் பிடியில் உள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. இந்திய நாடு பன்முக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. ஆனால் இந்திய பிரதமர் மோடி 3வது இடத்தில் உள்ளது என கூறினார். 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். கருப்பு பணம் மீட்கப்படும், 15 லட்சம் நிதி வைக்கப்படும், ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் அனுப்பப்படும் என கூறினார். எல்லாருக்குமான ஆட்சி என கூறினார். ஆனால் கார்பரேட்டுக்கு துணை போகும் ஆட்சியாக உள்ளது. 140 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதுவே நாட்டின் அழிவிற்கு அறிகுறி.
மோடியால் பாராளுமன்றம் நிலைகுலைந்து போய் உள்ளது.
ஜெர்மனியில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது. இதே போல பல நாடுகளை பார்த்து இருக்கிறோம். நாட்டிற்கு பின்னடைவாக இருந்து உள்ளது. இந்திய ஜனநாயகம் , குடியரசு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் விரும்புகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என நாட்டு மக்களும் முழக்கமாக உள்ளது. அமலாக்கத்துறை போன்ற சக்தியை வைத்துக்கொண்டு எதிர் அணி தலைவர்களை அச்சுறுத்துகின்றனர்.
*இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மாறுபட்டு செயல்படுகின்றனர் என்ற கேள்விக்கு..,*
எல்லா மாநிலங்களிலும் அரசியல் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. பாஜகவினர் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். எதிர் அணியினரை ஏவி விடுகின்றனர். இந்தியா கூட்டணியினர் இதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பார்க்காமல் ஒரு நாடு, ஒருதேர்தல், ஒரே ரேஷன் கார்டு என மக்களை திசை திருப்பி பார்க்கின்றனர்.
*வேலைக்கு வந்த சிறுமி கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்த கேள்விக்கு.., பதில் அளித்த முத்தரசன் கூறுகையில்..,*
திமுக எம்எல்ஏவின் குடும்பத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல அண்ணாமலை போன்ற பாஜகவினர் பத்திரிக்கையாளர் மீது வன்மமாக பேசி வருகின்றனர்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசிரியர் கார்த்திகை செல்வன் குறித்து தவறாக கூறி அது கண்டனத்துக்கு உள்ளானது பேசியுள்ளார். தற்பொழுது ஒரு வன்முறை கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது இது கண்டனத்துக்குரியது. தேர்தல் கூட்டணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.